இதுவரை உயர்கல்வி சேராத மாணவர்களுக்கு நாளை சிறப்பு முகாம்கள்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Published : Oct 27, 2022, 03:29 PM ISTUpdated : Oct 27, 2022, 03:42 PM IST
இதுவரை உயர்கல்வி சேராத மாணவர்களுக்கு நாளை சிறப்பு முகாம்கள்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சுருக்கம்

2021-2022 கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேருதாத மாணவர்களுக்காக, தமிழக அரசு சார்பில் அந்தந்த பள்ளிகளில் உயர்கல்விக்கான சிறப்பு முகாம்கள் நாளை நடைபெறவுள்ளன.

இதுக்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” 12 ஆம் வகுப்பு  முடித்தவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு முகாம்கள்

தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2021-2022 கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களில் பலர் உயர்கல்விக்குச் சென்றுவிட்டனர். எனினும் சூழ்நிலை காரணமாக  சில மாணவர்கள் இன்னமும் கல்லூரிகளுக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.  

அவர்களுக்காகவே  தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான சிறப்பு முகாம்கள் இதுவரை இரண்டு முறை நடத்தப்பட்டிருக்கின்றன.
மூன்றாவது முறையாக அக்டோபர் 28, 2022 அன்று காலை 10 மணி தொடங்கி முகாம்கள் நடக்கவிருக்கின்றன. இந்த முகாம்களில் கல்லூரிச் சேர்க்கைக்காக முறையாக வழிகாட்டுதலோடு ஆலோசனைகள் வழங்கப்படவிருக்கின்றன. 

மேலும் படிக்க:நயன்தாரா வாடகை தாய் விவகாரம்..! பழைய சட்ட விதியே பின்பற்றப்பட்டுள்ளது- மா.சுப்பிரமணியன்

கண்முன் உள்ள பல்வேறு வாய்ப்புகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வதுடன் உயர்கல்வியின் அவசியமும் எடுத்துரைக்கப்படும்.  இதுவரை கல்லூரியில் சேராத தங்கள் வகுப்பு நண்பர்களை அழைத்துக்கொண்டு வரும்படியும், அப்படி முடியாதபட்சத்தில் அவர்கள் குறித்த தகவல்களை பள்ளி தலைமையாசிரியருக்கு அளிக்கும்படியும் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

வழிகாட்டுதல் வேண்டி வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள்/ ஆசிரியர்கள் மூலம் அவரவர் பயின்ற பள்ளிகளில் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தமிழகத்தில் உள்ள கோயில்களின் உள் பிரகாரத்தில் யாகங்கள் நடத்த தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

PREV
click me!

Recommended Stories

கரூர் கூட்ட நெரிசல்.. முதல்வர் விஜய் வழங்கிய அனைவரது அரசு பணியும் ரத்து..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பருவமழை முன்னேற்பாடு: கூவம் ஆற்றில் நடக்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் என். ஆனந்த்!