தமிழக அரசு சார்பில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - சிறப்பு ஏற்பாடுகள்!

Asianet News Tamil  
Published : Nov 26, 2016, 10:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
தமிழக அரசு சார்பில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - சிறப்பு ஏற்பாடுகள்!

சுருக்கம்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, ராமநாதபுரத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்காக, பேருந்து போக்‍குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்புடன் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கிராமப்புற இளைஞர்கள் உட்பட அனைவருக்‍கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், லட்சக்‍கணக்‍கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

அந்த வகையில், ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், நூற்றுக்‍கும் மேற்பட்ட தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு, பணியாளர்களைத் தேர்வு செய்கின்றன. இம்முகாமில் இளைஞர்கள், இளம்பெண்கள் பெருந்திரளானோர் பங்கேற்கின்றனர். அவர்களுக்‍காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மூலம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது

PREV
click me!

Recommended Stories

Vijay Set Hit Back: 5 வருடம் 5 முதலமைச்சர்.! சீமான் உள்ளிட்டோரை ஸ்கெட்ச் போட்டு தூக்க திட்டம் ரெடி.! அடித்து ஆட தொடங்கும் விஜய்.!
TVK Vijay: ரூ.5,000 கோடி பேரம் தோல்வி?! அமித்ஷாவுக்கு ‘நோ’ சொன்ன விஜய்.! தளபதி முடிவால் கொதிக்கும் டெல்லி!