பொங்கல் பண்டிகையையொட்டி 10 ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு- எந்த, எந்த ரயில்கள்.? தெற்கு ரயில்வே அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Jan 12, 2024, 2:37 PM IST
Highlights

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் வசதிக்காக 10 ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
 

பொங்கல் கொண்டாட்டம்- சிறப்பு ரயில்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊரில் கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் பயணத்திற்கு திட்டம் வகுத்துள்ளனர். இந்தநிலையலி் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்துள்ள காரணத்தால் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து பொங்கல் பண்டிகைக் காலத்தில் பயணிகளின் கூடுதல் நெரிசலைக் கருத்தில் கொண்டு, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, 

Latest Videos

10 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

1.    ரயில் எண்.12084 கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 14.01.2024 முதல் 17.01.2024  வரை ஒரு சேர்கார் (உட்கார்ந்து செல்லும் வசதி) ரயில் பெட்டி  அதிகரிக்கப்படும்.

 2.    ரயில் எண்.12083 மயிலாடுதுறை - கோயம்புத்தூர் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் 14.01.2024 & 17.01.2024 வரை  ஒரு சேர்கார் (உட்கார்ந்து செல்லும் வசதி) ரயில் பெட்டி  அதிகரிக்கப்படும்.


 3.    ரயில் எண்.22650 ஈரோடு - சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் 16.01.2024 & 18.01.2024 ஒரு முன்பதிவு பெட்டி அதிகரிக்கப்படும்.

 4.    ரயில் எண்.22649 சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் 17.01.2024 & 19.01.2024 ஒரு முன்பதிவு பெட்டி அதிகரிக்கப்படும்.


 5.    ரயில் எண்.16616 கோயம்புத்தூர் - மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் ஜனவரி 13, 15 & 17, 2024 ஒரு முன்பதிவு பெட்டி அதிகரிக்கப்படும்.

 

 6.    ரயில் எண்.16615 மன்னார்குடி - கோயம்புத்தூர் செம்மொழி எக்ஸ்பிரஸ் ஜனவரி 13, 15 & 17, 2024, ஒரு முன்பதிவு பெட்டி அதிகரிக்கப்படும்.


 7.    ரயில் எண்.22668 கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஜனவரி 12, 14 & 16, 2024 ஒரு முன்பதிவு பெட்டி அதிகரிக்கப்படும்.

 8.    ரயில் எண்.22667 நாகர்கோவில் - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ஜனவரி 13, 15 & 17, 2024, ஒரு முன்பதிவு பெட்டி அதிகரிக்கப்படும்.


 9.    ரயில் எண்.12243 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் 13.01.2024  ஒரு சேர்கார் (உட்கார்ந்து செல்லும் வசதி) ரயில் பெட்டி  அதிகரிக்கப்படும். 

 10.  ரயில் எண்.12244 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் 13.01.2024 ஒரு குளிர் சாதன  ஒரு சேர்கார் (உட்கார்ந்து செல்லும் வசதி) ரயில் பெட்டி  அதிகரிக்கப்படும். 

இதையும் படியுங்கள்

சிறப்பு பேருந்துக்காக சென்னையில் 6 பேருந்து நிலையம்.. எங்கிருந்து எந்த ஊருக்கு பஸ் புறப்படுகிறது- தகவல் இதோ

click me!