ஹய்யா…  தொடங்கிருச்சு தென் மேற்கு பருவ மழை ….. இன்னும் 2 நாள் பொறுங்க… அப்புறம் பாருங்க சும்மா வெளுத்துக்கட்டப் போகுது….

First Published May 26, 2018, 5:16 AM IST
Highlights
south west moonsoon started in andaman island


அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தற்போது குமரிக் கடல், மாலத்தீவு பகுதிகள், தெற்கு வங்கக் கடலில் சிலபகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கு சாதகமான நிலை நிலவுதால் அடுத்த 48 மணி நேரத்திற்குப் பிறகு தமிழக, கேரள பகுதிகளில் தென் மேற்கு பருவமழை செளுத்துக்கட்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன், செய்தியாளர்களிடம் பேசும்போது,  தென் மேற்கு பருவ மழை, தெற்கு அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் நேற்று  முதல் தொடங்கி உள்ளதான தெரிவித்தார்.

இதையொட்டி, குமரிக்கடல், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே, மீனவர்கள் குமரிக் கடல், தெற்கு லட்சத்தீவு பகுதிகள், கேரளா மற்றும் கர்நாடக கடல் பகுதிகளில் வருகிற 30-ந் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்..

தற்போது தமிழக பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக திருவையாறில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் 2 தினங்களில் தென் தமிழகத்தின் அனேக இடங்களிலும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழையைப் பொறுத்த வரை தமிழகத்தைவிட கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிக அளவு மழையை எதிர்பர்க்கலாம். ஆனாலும் இந்த தமிழகத்துக்கு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

click me!