
"முதியோர் இல்லத்தில்" சேர்க்க போவதாக "மகன்" கூறியதால்,தாய் தந்தை தற்கொலை..!
கன்யாகுமாரி மாவட்டத்தில் பயங்கரமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
முதியோர் இல்லத்தில் சேர்க்க போவதாக மகன் கூறியதால், தாய் தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
குழந்தைகள் தான் முக்கியம் என்று மனைவியுடன் சேர்ந்து கொண்டு தன் தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்க்க மனமுவந்து, இதனை பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார் மகன்
இதனால் மனமுடைந்த பெற்றோர்கள் இருவரும், இனி தன் மகனுக்கும் மருமகளுக்கும் எந்த விதத்திலும் சுமையாக இருக்க வேண்டாம் என நினைத்த பெற்றோர்கள் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்து தூக்கிட்டு தற்கொலையும் செய்துக்கொண்டனர்
அதிகரித்து வரும் முதியோர் இல்லங்களில், பெற்றோர்கள் படும்பாடு எவ்வளவு வலி என்பது தற்போதைய இளைஞர் பிற்காலத்தில் முதியோர் இல்லத்தில், அவர்களது பிள்ளைகளால் சேர்க்கப்படும் போது தான் அதன் வலி உணர முடியும்
அது வரையில் இது போன்ற கொடூர சம்பவங்கள் நடைப்பெற்று தான் இருக்கும்...
தன்னை பெற்று எடுத்த பெற்றோர்களை சுமையாக கருதும் பிள்ளைகளுக்கு, பெற்றோர்கள் இறந்தபின் உண்மையில் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறார்களா..?
அப்படி ஒரு வாழ்கை தேவைதானா..? இல்லை அதில் தான் உண்மையான நிம்மதி உள்ளதா..?
வயதான காலத்தில் அனாதை ஆக்கி, அவர்களை கொடுமை படுத்தும் மகன்ளுக்கு இது சமர்ப்பனம்...