போதையில் தாயை அடித்து, கீழே தள்ளிய மகன்; மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் இறந்த சோகம்...

Asianet News Tamil  
Published : Jun 18, 2018, 10:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
போதையில் தாயை அடித்து, கீழே தள்ளிய மகன்; மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் இறந்த சோகம்...

சுருக்கம்

son beaten and push down his mother died while taking to hospital

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்டது உடன்குடி. இதனருகே உள்ள பில்லாவிளை  பகுதியைச் சேர்ந்தவர் ராஜகிளி. இவரது மனைவி சாந்தி (45). இந்த தம்பதியினரின் மகன் டேனியல்.

இவர் தினமும் சாராயம் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம். இதனால் இவர்களது வீடு எப்போதும் சண்டை சச்சரவுகளுடனே காணப்படுமாம்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த டேனியல், தனது தாயாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் தகராறு முற்றியதில் தாயாரை சரமாரியாக அடித்துவிட்டு, அவரை கீழே தள்ளிவிட்டுள்ளார் டேனியல். 

இதில், தாயார் சாந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மீட்டு சாந்தியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து தகவலறிந்த காவலாளர்கள் சாந்தியின் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் தீவீர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். கீழே தள்ளிவிட்டு சாந்தி இறந்தரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள காவலாளர்கள் உடற்கூராய்வு ரிப்போர்ட்டுக்காக காத்திருக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
ஆட்டோ டிரைவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உற்சாகமாக புத்தாண்டு கொண்டாடிய போலீசார்