
இராமநாதபுரம்
முதுகுளத்தூரில் திருட்டுத்தனமாக மணல் அள்ளியவர்கள் சிறப்பு தனிப்படை காவலாளர்களை பார்த்ததும் தப்பியோடினர. அவர்கள் வைத்திருந்த நான்கு டிராக்டர்கள், ஒரு மணல் அள்ளும் இயந்திரத்தை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், இளஞ்செம்பூர் காவல் சரகத்தைச் சேர்ந்த சவேரியார்பட்டிணம் கிராமத்தில் ஒரு கும்பல் வாகனங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து கடலாடி வருவாய் ஆய்வாளர் காசிநாதன் கொடுத்த புகாரின் பேரில் மாவட்டக் காவல்துறை கண்காணிப்புச் சிறப்புத் தனிப்படை எஸ்.ஐ.கணேசலிங்க பாண்டியன் மற்றும் காவலாளர்கள் திருட்டுத்தனமாக மணல் அள்ளும் இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, வருவாய்த் துறையினரிடம் மணல் அள்ளுவதற்கான எந்தவொரு அனுமதியும் பெறாமல் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தெரிய வந்தது.
காவலாளார்கள் விசாரணை நடத்தியபோது அனைத்து வாகன ஓட்டுநர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து அனைத்து வாகனங்களையும் காவலாளர்கள் பறிமுதல் செய்து பரமக்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
தப்பியோடிய ஓட்டுநர்கள் குறித்து காவலாளர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.