சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவுப் பெட்டி… ஐம்பொன்னால் ஆன மகாலட்சுமி சிலை !! பக்தர்கள் பரவசம் !!

Published : Aug 31, 2019, 08:49 AM IST
சிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவுப் பெட்டி… ஐம்பொன்னால் ஆன மகாலட்சுமி சிலை !!  பக்தர்கள் பரவசம் !!

சுருக்கம்

சிவன்மலை கோவிலில், ஆண்டவர் உத்தரவு பொருள் மாற்றப்பட்டு, ஐம்பொன்னால் ஆன மகாலட்சுமி சிலை வைக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.  

திருப்பூர் மாவட்டம், சிவன்மலையில் உள்ள ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவர் உத்தரவுப்பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில் தோன்றி, சிவன்மலை ஆண்டவர் குறிப்பால் உணர்த்தும் பொருள், கோவிலில் மூலவர் முன் அனுமதி பெற்று, இப்பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுவது வழக்கம்.

இதில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, பக்தர்கள் நம்பிக்கை. இந்நிலையில், திருச்செந்துாரை சேர்ந்த மகாலட்சுமி, என்பவரது கனவில் பெற்ற உத்தரவுப்படி, ஐம்பொன்னால் செய்த மகாலட்சுமி சிலை நேற்று இப்பெட்டியில் வைத்து பூஜை நடத்தப்பட்டது.

இதன் மூலம், 'மக்கள் மத்தியில், பொன், பொருள் சேமிப்பு அதிகரிக்கும்; மகாலட்சுமியின் செல்வத்தின் அடையாளம் என்பதால், பொருளாதாரம் மேம்படும்; சுபகாரியங்கள் அதிகளவில் நடக்கும்' என சிவாச்சார்யார்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள மகாலட்சுமி சிலையை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்? ரொக்கப்பணம் உண்டா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!