தொடங்கியது ஜில் ஜில் வடகிழக்கு பருவமழை - உஷார் நிலையில் தமிழகம், புதுச்சேரி...!

First Published Oct 27, 2017, 2:29 PM IST
Highlights
Since the end of the South West monsoon rains the north-east monsoon rains have begun today


தென் மேற்கு பருவ மழை முடிந்ததையடுத்து இன்று முதல் பல்வேறு தரப்பினராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் உஷார் நிலையில் தமிழகம்  மற்றும் புதுச்சேரி உள்ளது. 

தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மழை அதிகம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திலும் தென் மேற்கு பருவமழை சீசனில் நல்ல மழை பெய்தது.

இந்த நிலையில் அடுத்த 2 தினங்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  

தென்மேற்கு பருவமழை காலம் நேற்றுடன் நிறைவடைந்து,  வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கியது. 

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  அதன்படி இன்று முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. 

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தாம்பரம், பல்லாவரம், கே.கே நகர், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலையில் மிதமான மழை பெய்தது.

தமிழகம், புதுச்சேரியில் இன்று வடகிழக்கு பருவமழை முழுமையாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

click me!