சோலையார் அணை பூங்காவுக்கு 20 ஆண்டுகளுக்கு விடிவு பிறந்தது; சீரமைக்கும் பணிகள் தொடங்கியது…

Asianet News Tamil  
Published : Mar 17, 2017, 09:15 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
சோலையார் அணை பூங்காவுக்கு 20 ஆண்டுகளுக்கு விடிவு பிறந்தது; சீரமைக்கும் பணிகள் தொடங்கியது…

சுருக்கம்

Sholayar dam dawn came to the park for 20 years Begun to restructure

வால்பாறை

20 ஆண்டுகளாக சோலையார் அணை பூங்காவை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இப்போது தான் விடிவு பிறந்து, சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.

தமிழ்நாட்டிலேயே சிறப்பு மிக்க ஒரு திட்டம் பரம்பிக்குளம் – ஆழியார் திட்டம். இந்த திட்டத்தில் 8 அணைக்கட்டுகள் உள்ளன.

இந்த திட்டத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் அணைகளான சோலையார் அணை, நீரார் அணை, சின்னக்கல்லார் அணை ஆகிய மூன்று அணைகளும் உள்ளன.

இந்த அணைகள் வால்பாறை மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தமிழக – கேரள நதிநீர் பங்கீடு ஒப்பந்தப்படி கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேலும், பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி அணைகளுக்கும் தண்ணீர் செல்கிறது. அதேபோல், பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை பகுதியில் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கும் இந்த திட்டத்தின் மூலமே தண்ணீர் செல்கிறது.

இந்த அணைகளின் பராமரிப்பு பணிகள் மத்திய அரசின் நீர்வளத்துறை ஆணையத்தின் மூலம் உலக வங்கியின் நிதி உதவியோடு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இதில் சோலையார் அணை ரூ.16 கோடி செலவிலும், நீரார் அணை ரூ.3 கோடியே 15 இலட்சம் செலவிலும், சின்னக்கல்லார் அணை ரூ.2 கோடியே 51ஈலட்சம் செலவிலும் என மொத்தம் ரூ.21 கோடியே 66 இலட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதில் அணையின் தடுப்பு சுவர்கள், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பழுதுகள், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகள், தண்ணீர் திறந்துவிடும்போது தண்ணீர் வெளியாகும் பாதைகள், அணைகளில் சுரங்க கால்வாய்கள் வழியாக தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதைகள், மின்நிலையங்களுக்கு தண்ணீர் செல்லும் பாதைகள் ஆகியவைகளுக்கான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், சோலையார் அணையில் இருந்து தண்ணீர் நிரம்பி வழியும் காலங்களில் தானாகவே தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியாகும் சேடல்பாதையில் தடுப்புசுவர் அகலப்படுத்தப்படுகிறது.

பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், அந்த பகுதிகளுக்கு பொதுப்பணி துறையினர் செல்வதற்கு வசதியாக நடைபாதைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சி நடைபெற்று வருகிறது.

சோலையார் அணை பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இப்போதுதான், இதற்கு விடிவுகாலம் பிறந்தது. இந்த பூங்காவை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. பூங்கா பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

TVK Vs CPM: ஆதரவை வாபஸ் பெறுவோம்.. தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை!
CM Vijay Vs PM Modi: ஆபத்து! தமிழ்நாட்டிற்கு உடனே வேணும்.. விவசாயிகளுக்காக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பரபரப்பு கடிதம்