Annapoorani Arasu : மர்ம மரணம்! மயக்கும் வஸ்து! அதிரடி கைது!: அன்னபூரணியின் அலறல் அப்டேட்ஸ்..

By Ganesh RamachandranFirst Published Jan 3, 2022, 10:50 AM IST
Highlights

அன்னபூரணி நடத்தும் முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு தரப்படும் பிரசாதத்தில் ஏதேனும்மயக்கும் வஸ்துகலந்துள்ளதா? என இன்னொரு புறம் போலீஸ் துளையிட துவங்கியுள்ளது

சன்டே, மன்டே என்று எந்த டேயையும் மிச்சம் வைக்காமல் தமிழகத்தை அன்னபூரணி வைபரேஷன் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. அபூ!வை வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ணுமளவுக்கு அவர் வடிவேலுவுக்கே செம்ம சவால் கொடுக்க துவங்கிவிட்டார்.

இந்த சூழலில், அன்னபூரணி குறித்த அப்டேட்ஸ்களை சேகரித்து நமது இணையதளம் தரும் அபூ சீசன் -3 யின் ஹைலைட்ஸ் இதோ….

  • ’அம்மா அருளாசி’ என்று அங்கேயிங்கே கை வைத்து, கடைசியில் தான் தொழில் பழகிய பங்காரு டீம் கோலோச்சும் செங்கல்பட்டு பகுதிக்குள் அவர் கால் வைத்ததுதான் பிரச்னைகள் வெடிக்க காரணமாகிவிட்டதாம்.
  •  இப்படியே விட்டால், அன்னபூரணி ஓவராய் போய்விடுவார்! என்று பிளான் பண்ணி, அவர் ஒரு போலி என்று பொருள் படும் விதமாக வீடியோக்களை தட்டிவிட்டனராம். குறிப்பாக ‘சொல்வதெல்லாம் உண்மை நிகழ்வில் சிக்கியவர்’ என்று எடுத்துவிட்ட வீடியோதான் எக்கச்சக்க சிக்கலானது அன்னபூரணிக்கு.
  • அரசும் ‘என்னான்னு கவனிங்க அதை’ என்று இந்த மேட்டரில் கவனம் செலுத்தியதால், போலீஸும் களமிறங்கியது. ஒரு கட்டத்தில் அன்னபூரணியின் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தது. அடுத்து, அன்னபூரணியின் தற்போதைய ஆல் இன் ஆல் மனிதரான ரோகித்தையும் தேட துவங்கினர்.

  • இந்த சூழலில்தான் ‘ஆபத்து, ஆபத்து என்னுடைய உயிருக்கு ஆபத்து’ என்று தாவணி கட்டிய வடிவேலு ரேஞ்சுக்கு யூடியூப் பேட்டியெல்லாம் கொடுத்தார். ஆனால் அது அவருக்கு மேலும் சிக்கலை கிளப்பியதால், கமிஷனர் அலுவலகம் வந்து புகாரே கொடுத்தார்.
  •  இதன் பின் தனக்கு பெரிய சிக்கலிருக்காது! என நினைத்த அன்னபூரணிக்கு ஆப்படிக்கும் விதமாக, அவரது பழைய பார்ட்னர் (!?) அரசுவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது மனைவி, அம்பத்தூர் போலீஸ் கொடுத்த புகார் தூசி தட்டப்பட்டது. இந்நிலையில், அன்னபூரணியின் முதல் கணவரான சங்கரநாராயணனை தேட, ‘அவர் செத்துட்டார்’ என்று பதில் கிடைத்ததாம்.
  • இதையெல்லாம் விட, அன்னபூரணி நடத்தும் முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு தரப்படும் பிரசாதத்தில் ஏதேனும் ‘மயக்கும் வஸ்து’ கலந்துள்ளதா? என இன்னொரு புறம் போலீஸ் துளையிட துவங்கியுள்ளது.
  • இப்படி பல திசைகளில் இருந்தும் பிரச்னைகள் நெருக்கும் நிலையில், தடாலடியாக அபூ! கைதானாலும் ஆச்சரியமில்லை! என்கிறார்கள்.
click me!