தமிழ்நாட்டு கிராமங்கள் எல்லாம் மோசமான வறுமையில் உள்ளன: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை

By SG Balan  |  First Published Jan 28, 2024, 8:15 PM IST

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் மோசமான வறுமை நிலையில் உள்ளதாகவும் அதனைக் கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் நிலவும் மோசமான வறுமை நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறார். அவ்வப்போது சரச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லி கவனம் பெறும் ஆளுநர் இப்போது கிராமங்கள் பற்றிப் பேசி இருக்கிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வெண்மணி படுகொலையில் உயிர் பிழைத்த பழனிவேல் என்பவரை அவரது கிராமத்துக்குச் சென்று சந்தித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

அயோத்தி ராமர் கோயிலுக்கு காணிக்கையாக வந்த வெள்ளித் துடைப்பம்!

"Visited Keezhvenmani village in Nagapattinam district and met Thiru G. Palanivel, the only survivor of 1968 massacre. Also visited Nambyar Nagar inhabited by fishermen and Jeeva Nagar by Scheduled Castes. Shocked to see the abject poverty all along the villages. One wonders how… pic.twitter.com/trcsrKmm4S

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn)

அதில், "நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்திற்குச் சென்று 1968 படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான திரு. ஜி. பழனிவேலைச் சந்தித்தேன். மேலும் மீனவர்கள் மற்றும் பட்டியலின மக்கள் வசிக்கும் நம்பியார் நகர் மற்றும் ஜீவா நகர் பகுதிகளைப் பார்வையிட்டேன்" என்று கூறியுள்ளார்.

"கிராமங்கள் முழுவதும் வறுமையின் கொடுமையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். துரதிர்ஷ்டவசமாக, இந்த சகோதர சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டு கிராமங்கள் எல்லாம் மோசமான வறுமையில் உள்ளன: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை

click me!