
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
இந்த படத்தில், சொடக்கு பாடல் மிகவும் பிரமாதமாக வந்துள்ளதாம். இதெல்லாம் சரி இதுல என்ன ஸ்பெஷல் னா, இன்று பிறந்த நாள் காணும் அனிருத்துக்கு பிறந்த நாள் பரிசாக, இந்த படத்தின் இரண்டாவது பாடல் டீசர் நேற்று இரவு வெளியிடப்பட்டது
இந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, பெருத்த ஆவலை ஏற்படுத்திய தானே சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாம்.
இதில் என்ன விசேஷம் தெரியுமா?
சில நாட்களுக்கு முன் ஜிமிக்கி கம்மல் பாடல் மூலம் மக்களின் மனதை தட்டி சென்ற ஷெரில் சுடக்கு பாடலில், சுடக்கு போட்டு டான்ஸ் பண்ணி இருக்கிறார்.
இந்த பாடல் டீசர் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக,தற்போது வெளியாகி உள்ள மெர்சல் பட டீசர் மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று அமோக சாதனை படைத்தது.
இதனை முறி அடிக்குமா சூர்யாவின் " தானே சேர்ந்த கூட்டம் " என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் யாரு எப்போ எப்படி பிரபலம் ஆவார்கள் என யாருக்குமே தெரியாது போல.... ஒரு பக்கம் ஜூலி பொண்ணு, ஏதோ பீச்ல குறைச்சிட்டு இருந்துச்சி....இப்ப பார்த்தா அது ஒரு பக்கம் போடுற சீன் தாங்க முடியல.
இந்நிலையில், ஜிமிக்கி கம்மல் ஷெரில் சூர்யா படத்துல டான்ஸ் ஆடி இருக்குனா பாருங்க....எங்கேயோ கல்லூரியில் வேலை செய்த பெண், இப்ப ஆட்டம் போட ஆரம்பிச்சி இருக்கு .....