சசிகலா, பன்னீர்செல்வம் இருவருக்கும் காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – சொன்னவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

 
Published : Feb 14, 2017, 09:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
சசிகலா, பன்னீர்செல்வம் இருவருக்கும் காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – சொன்னவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சுருக்கம்

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை சசிகலா, பன்னீர்செல்வம் இருவருக்கும் ஆதரவு இல்லை என்று திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு நேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வந்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“தமிழகத்தில் வறட்சியால் இதுவரை 126 விவசாயிகள் இறந்துள்ளனர். பருவமழை பொய்த்துவிட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை.

இதுபோன்ற முக்கிய பிரச்சனைகளில் தமிழக ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் யாரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆளுநர் காலம் தாழ்த்துவது நியாயமாகத்தான் தோன்றுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை ஆளுநர் காத்திருப்பதில் தவறில்லை.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை சசிகலா, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு இல்லை. கூட்டணிக் கட்சியான திமுக எடுக்கும் முடிவுக்கே ஆதரவாக இருப்போம்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்து வருவது அவரது சொந்தக் கருத்து. 

கொல்லைப்புறமாக முயற்சி செய்தாலும் பாஜக ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் நிறைவேற்றியது, ஆந்திர அரசுடன் பேசி காவிரி நீர் பெற்றுத் தந்தது, எளிதில் யாரையும் அணுகும் முறை என கடந்த 2 மாதங்களாக முதல்வர் பன்னீர்செல்வம் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்” என்றுத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்கிறீங்களா? உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட அதிரடி உத்தரவு!
அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!