ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொல்லை தாங்கவில்லை; நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முற்றுகையிட்ட மக்கள்...

 
Published : May 18, 2018, 09:07 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொல்லை தாங்கவில்லை; நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முற்றுகையிட்ட மக்கள்...

சுருக்கம்

Share Auto drivers bothering People surrounded police station demanding action ...

மதுரை
 
ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாடிப்பட்டியில் உள்ள காவல் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்டனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இருந்து செம்மினிப்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, ராமயன்பட்டி, பூச்சம்பட்டிவரை மினி பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். 

இந்த நிலையில் அந்தப் பகுதியில் செல்லும் சில மாதங்களாக ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மினி பேருந்து ஓட்டுநர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட தகராறு காரணமாக கிராமப்புறத்திற்கு செல்லும் மினி பேருந்து செல்லும் நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் மக்கள் அவதிக்குள் உளானார்கள். 

நேற்று மாலை கச்சைகட்டி, சொக்கலிங்கபுரம், ராமயன்பட்டி கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு வாடிப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தடையின்றி மினி பேருந்தை இயக்குவதோடு ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். முடிவில் காவல் ஆய்வாளர் ரெஜினாவிடம் மனுக்கள் கொடுத்தனர்.

இதற்கிடையே மின் பேருந்து ஓட்டுநர்களுக்கும், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

மினி பேருந்து ஓட்டுநர் அம்பேத்சந்திரன், நடத்துநர் கோபிராஜா, ஆட்டோ ஓட்டுநர்கள் கோபாலகிருஷ்ணன், பாலமுருகன் ஆகிய நால்வரை கைது செய்தனர். மேலும் மினி பேருந்து ஓட்டுநர் செந்தில்குமார் என்பவரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!