பரபரப்பை கிளப்பும் மருத்துவ மாணவர் மரணம்...! தற்கொலை இல்லையாம்...?

 
Published : Jan 17, 2018, 03:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
பரபரப்பை கிளப்பும் மருத்துவ மாணவர் மரணம்...! தற்கொலை இல்லையாம்...?

சுருக்கம்

Sharad Prabhu a medical student who died in Delhi

டெல்லியில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு தலையில் ரத்த காயம் இருப்பதால் தற்கொலைக்கு வாய்ப்பில்லை என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

திருப்பூரை சேர்ந்த சரத் பிரபு என்பவர் கோவை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டெல்லியில் யூசிஎம்.எஸ் மருத்துவ கல்லூரியில் எம்.டி படித்து வந்தார். 

இவர் விடுதியில் தங்கியே படித்து வந்தார். இந்நிலையில் சரத் பிரபு இன்று காலை கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சரத் பிரபு சடலமாக கிடப்பதை பார்த்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். 

பின்னர் அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கழிவறையில் தனக்கு தானே இன்சுலின் ஊசி செலுத்திக் கொண்டு சரத் பிரபு இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் சரத் பிரபுவுடன் தங்கியிருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் இரண்டு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவரின் தந்தை வந்த பிறகு பிரேத பரிசோதனை செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது. 

இதனிடையே சரத்பிரபுவின் தலையில் ரத்த காயம் இருப்பதால் தற்கொலைக்கு வாய்ப்பில்லை என போலீஸ் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

20 மாவட்டங்களில் 60 அரசு பள்ளிகளில்! பள்ளிக்கல்வித்துறையில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்!
இந்தி எதிர்ப்பு போராட்டம்... இதுவரை வெளிவராத ஆவணங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!