அண்ணாசாலை புரட்சி! கொத்துக் கொத்தாக பல்லாயிரக் கணக்கானோர் பேர் கைது... செய்வதறியாமல் திணறும் போலிஸ்...

 
Published : Apr 10, 2018, 07:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
 அண்ணாசாலை புரட்சி! கொத்துக் கொத்தாக பல்லாயிரக் கணக்கானோர் பேர் கைது... செய்வதறியாமல் திணறும் போலிஸ்...

சுருக்கம்

severe protest occurs in anna salai and chepauk stadium

மறியல் போராட்டம் நடத்திய இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவுதமன், வி,சேகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்  அவர்களோடு போராடியவர்களை கொத்துக் கொத்தாக கைது செய்தாலும் இன்னும் அங்கே பல்லாயிரக்கணக்கானோர் இருப்பதால் கைது செய்யமுடியாமல் திணறி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. போராட்டக்காரர்களின் ஐபிஎல் போட்டி ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சென்னை அண்ணா சாலையில் பல ஆயிரம் பேர் திரண்டதால் காவல்துறையினர் செய்வது அறியாமல் திகைத்துபோயினர். 4 திசையில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திடீரென அண்ணா சடிலை அருகே திரண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான போலீசார் போராட்டத்தை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். 

மைதானத்திற்கு செல்லும் சாலையில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சக்கர நாற்காலியில் வந்து மாற்றுத்திறனாளிகள் அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அண்ணா சாலையில் இருந்து கிரிக்கெட் மைதானம் செல்லும் வழியில் மறியல் செய்து வருகின்றனர்.  

மேலும், ரசிகர்களுக்கு கருப்பு பேட்ஜை விநியோகம் செய்யப்பட்டு வந்தனர். மோடியின் உருவபொம்மையை எரித்தும், காலணிகளால் அடித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகளும் எரிக்கப்பட்டன. அண்ணா சாலையின் 4 புறங்களில் இருந்தும் போராட்டக்காரர்கள் குவிகின்றனர். கைது செய்வதற்காக போலிஸ் வாகனங்கள் தயாராக வைத்துக் கொண்டு கொத்துக் கொத்தாக வாகனத்தில் அள்ளிப் போட்டுக் கொண்டு செல்கின்றனர்.

ஆனாலும் இன்னும் பல ஆயிரம் பேர் ஸ்டேடியம் இருக்கும் பகுதியில் போராட்டத்தால் மிரட்டுவதால் கைது செய்யமுடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!