கதிராமங்கலம் போராட்டம் - 10 பேருக்கு காவல் நீட்டிப்பு!!

Asianet News Tamil  
Published : Jul 28, 2017, 04:38 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
கதிராமங்கலம் போராட்டம் - 10 பேருக்கு காவல் நீட்டிப்பு!!

சுருக்கம்

sentence extended for 10 persons

கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசிக்கு எதிராக போராடிய 10 பேரின் காவலை நீட்டித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாயில் இருந்து திடீரென கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமைடைந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகவும் எண்ணெய் குழாயை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே அவர்கள் ஜாமின் வழங்க வேண்டும் என தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களின் ஜாமின் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த தஞ்சை நீதிமன்றம் இரண்டாவது முறையாக மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த கைது வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரின் காவலை ஆகஸ்ட் 11 வரை நீட்டித்து உத்தரவிட்டது. 

PREV
click me!

Recommended Stories

வாய்ப்பை தவறவிடாதீர்கள்! தாட்கோ கொடுக்கும் சூப்பர் வாய்ப்பு! அப்பல்லோ மருத்துவமனையில் வேலை.. ரூ.5,000 உதவித்தொகை!
திமுக ஆட்சி மீது காங்கிரஸ் பகீர் அட்டாக்..! தவெகவில் 50 சீட்..! ராகுல் காந்தியின் தமிழக வியூகம்..!