தெர்மோகோலை மீண்டும் கையிலெடுத்த அமைச்சர்….இது என்னோட ஐடியாவே இல்லை என புலம்பும் செல்லூர் ராஜு…

First Published Apr 25, 2017, 12:39 PM IST
Highlights
sellur taja press meet


வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க அதனை  தெர்மோகோல் மூலம் மூடும் திட்டம் என்னுடை ஐடியா இல்லை என்றும், அதிகாரிகளின் ஐடியாதான் எனவும் தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு, இப்பிரச்சனை தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் தன்னை பாராட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

வைகை அணையின் நீர் மதுரை மற்றும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களின்  பாசன வசதிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைகை அணையில் நீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டதால் , அதை ஆவியாகாமல தடுக்க தண்ணீர் மேல் தெர்மோகோல் அட்டைகளை மிதக்கவிடும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து தெர்மோகோல் அட்டைகளை செல்லோ டேப் மூலம் இணைத்து அமைச்சர் செல்லூர் ராஜு தண்ணீரில் மிதக்க விட்டார். மதுரை மற்றும் தேனி மாவட்ட கலெக்டர்களும் இந்த விழாவில் பங்கேற்று அட்டைகளை மிதக்க விட்டனர்.

மேலும் அந்த அட்டைகள் படகுகள் மூலம் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மிதக்க விடப்பட்டன. ஆனால் சிறிது நேரத்தில் மிதக்க விடப்பட்ட அனைத்து அட்டைகளும் சுவற்றில் அடித்த பந்தைப் போல மீண்டும் கரைக்கே திரும்பி வந்தன.

அமைச்சர் செல்லூர் ராஜுவின்  இந்த செயல் சமூக வலை தளங்களில் மிகுந்த விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இந்த செயலை கிண்டல் பண்ணாதவர்களே இல்லை என்னும் நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அதிகாரிகளின் ஆலோசனைப்படிதான் தெர்மோகோல் திட்டத்தை செயல்படுத்தியதாக தெரிவித்தார்.

தெர்மோகோலை பயன்படுத்தி நீர் ஆவியாகாமல் தடுக்கும் பல இடங்களில் செயல்படத்தப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் வைகை அணையில் முயற்சி செய்த இத்திட்டம்  தன்னுடைய ஐடியா இல்லை என்று அமைச்சர் கூறினார்.

ரப்பர் பந்துகளை பயன்படுத்தும் திட்டம் காஸ்ட்லியானது என கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, இப்பிரச்சனையில் ஏராளமானனோர் சமூக வலைதளங்கள் மூலம் தன்னை பாராட்டியதாகவும் கூறினார்.

 

 

 

click me!