சேகர் ரெட்டி ஜாமீன் மனு - தீர்ப்பை ஒத்திவைத்தது சிபிஐ நீதிமன்றம்

First Published Dec 27, 2016, 5:27 PM IST
Highlights


தமிழகத்தின் ஒட்டுமொத்த பரபரப்பையும் அடக்கி இருக்கு மணல் மாஃபியா சேகர் ரெட்டி வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. 

ராம் மோகன ராவின் மகன் விவேக் மோகனராவ் போன்றவர்களின் தொடர்பு உள்ளதை அடித்து ராம்மோகன்ராவ் வீடு , விவேக்கின் நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் சிபிஐ சேகர் ரெட்டியை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசி அதிகாரிகள் மனு அளித்திருந்தனர், ஜாமீன் கோரி சேகர் ரெட்டி மனு அளித்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை டிச.30 தேதிக்கு ஒத்திவைத்தார்.

click me!