
சென்னை மெரீனா கடற்கரையில் கூடினாலோ கூட்டம் நடத்தினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்தது.
மாபெரும் மக்கள் எழுச்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த சென்னை மாநகர காவல்துறை மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவை பிறப்பித்து பின்னர் அதனை திரும்பப் பெற்றது. இருப்பினும் கடற்கரையில் கூட்டம் நடத்தவோ, பேரணியாகச் செல்லவோ விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே முள்ளிவாய்க்கால் நினைவாக, மே 17 இயக்கம் சார்பில், மெரீனா கடற்கரையில் இன்று மாலை 4 மணிக்கு அஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் கடற்கரையில் சட்ட விதிகளை மீறி, கூடுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.