சுவீட் கடையில் புகுந்து அக்கப்போர் பண்ணிய எலிகள்! பலகாரத்தை ரசித்து ருசித்து திண்றதால் கடைக்கு சீல்!

 
Published : Nov 13, 2017, 03:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
சுவீட் கடையில் புகுந்து அக்கப்போர் பண்ணிய எலிகள்! பலகாரத்தை ரசித்து ருசித்து திண்றதால் கடைக்கு சீல்!

சுருக்கம்

Seal to the sweet shop

ஓசூரில், இனிப்பு கடை ஒன்றில் புகுந்த எலி ஒன்று, பலகாரங்களை ருசித்து ரசித்து சாப்பிட்ட காட்சியால், அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடையின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால், இந்த பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

இந்த பேருந்து நிலையத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. பூக்கடை, இனிப்பு கடை, ஓட்டல் என பல்வேறு கடைகள் உள்ளன. இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் புகுந்த எலி, அங்கிருக்கும் இனிப்பு பண்டத்தை சாப்பிடுவது போன்ற காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது. 

பலகாரத்தை, எலி ருசித்து சாப்பிடும் காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. இது குறித்து ஓசூர் நகராட்சி அதிகாரிகள் நேற்று பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, எலி சாப்பிட்ட இனிப்பு கடையை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த கடைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மேலும் கடையில் இருந்த இனிப்பு பலகாரங்கள் அனைத்தும் கொட்டி அழிக்கப்பட்டன. 

பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அலுவலர் ஒருவர் கூறும்போது, எலி இனிப்புகளை சாப்பிடுவது போன்று வாட்ஸ் அப்பில் உள்ள பல குழுக்களில் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளருக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் சுகாதாரமற்ற நிலையில் உணவு பண்டங்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுதாகவும் கூறினார். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து
விளைவிக்கும் பிரிவின்கீழ், கடையின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும் என்றும், இதுபோல் இன்னும் பல்வேறு கடைகளில் சோதனை நடத்த உள்ளதாகவும் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு