
இந்தியாவிற்குள் பறக்க டிக்கெட் ரூ. 99 மட்டுமே ...
தொடர்ந்து பல அதிரடி ஆபார்களை அறிவித்து வரும் ஏர் ஏசியா நிறுவனம் தற்போது மேலும் அதிரடி சலுகையை அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது
அதாவது இந்தியாவிற்குள் பல முக்கிய பகுதிகளுக்கு விமானம் மூலம் செல்ல டிக்கெட் விலை வெறும் ரூ. 99 மட்டும் தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
இதே போன்று வெளிநாடு செல்ல ( ஒரு வழி பயணம் மட்டும் ) - ரூ.444 எனவும் தெரிவித்துள்ளது
எப்போது பதிவு தொடங்குகிறது ?
ஸ்பெஷல் விமான பயணச்சீட்டுக்கான புக்கிங் இன்று இரவு 9.30மணிக்கு தொடங்கி நவம்பர் 19 தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
எப்போது பயணிக்க முடியும் ?
அடுத்த வருடம், ஜனவரி முதல் மே மாதம் வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்குள் எங்கெல்லாம் பயணிக்க முடியும் ?
இந்தியாவுக்குள் பெங்களூர், கொச்சி, ஹைதரபாத், ராஞ்சி , புவனேஷ்வர், கொல்கத்தா, டெல்லி, கோவா, ஆகிய இடங்களுக்கு இந்த ஆபர் மூலம் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
திருச்சிராப்பள்ளி, கொச்சி, டெல்லி , புவனேஷவர், ஜெய்பூர் ஆகிய இடத்திலிருந்து கோலாலம்பூர் வரை செல்ல, அதேபோல் பாலி செல்வதற்கு இந்த ஆபரை பயன்படுத்திக் கொள்ளலாம்....
எதற்காக இந்த சலுகை தெரியுமா ?
டாடா சான்ஸ் நிறுவனத்துடன் ஏர் ஏசியா பங்குதாரராக மாறி உள்ளதால் இந்த சலுகை வழங்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்த அற்புத வாய்ப்பை பயன்படுத்தி விமானம் மூலம் பறக்க ஆசைப்படும் அத்தனை பேரும் இப்போதே முன்பதிவு செய்துக்கொண்டு பயன்பெறுங்கள்....