இளம் பெண்ணுக்கு மது, கஞ்சா கொடுத்து கற்பழித்த கொடுமை... வெவ்வேறு இடங்களில் வைத்து வெறித்தனமாக கற்பழித்த 15 வாலிபர்கள்!

 
Published : Jun 13, 2018, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
இளம் பெண்ணுக்கு மது, கஞ்சா கொடுத்து கற்பழித்த கொடுமை... வெவ்வேறு இடங்களில் வைத்து வெறித்தனமாக கற்பழித்த 15 வாலிபர்கள்!

சுருக்கம்

school girl raped near chennai

பள்ளி மாணவியை கடத்தி சென்று மது, கஞ்சா கொடுத்து வெவ்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மேலும், 15 வாலிபர்களுக்கும் தொடர்பு உள்ளதால் அவர்களை போலீசார்  தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. இவரை காதலிப்பது போல நடித்து, அவரை அழைத்து சென்ற இளைஞர் ஒருவர். கஞ்சா, மது வாங்கிக்கொடுத்து வெவ்வேறு இடங்களில் வைத்து, வெவ்வேறு நாட்களில், திருவள்ளூரை சேர்ந்த ராஜேஷ், தலக்காஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் ஆகியோர்  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதை, தங்களது நண்பர்களான தலக்காஞ்சேரி கார்த்திக், அருண்குமார் காக்களூர் கமல் என்ற ராஜ்கமல், திருவள்ளூர் மகேஷ் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களும், மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். 

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் கார்த்திக் உள்பட 6 பேரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மாணவியிடம் நடத்திய விசாரணையில் மது, கஞ்சா கொடுத்து 21 வாலிபர்கள் கற்பழித்ததால்  உடல் மற்றும் மனநிலை பாதித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், தலைமறைவான 15 வாலிபர்களை 2 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை கைது செய்வதோடு கஞ்சா எடுத்து வருவதையும் போலீசார் கண்டுபிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!