
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்த சத்தியநாராயணன், மீண்டும் பொறுப்புக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக நீண்டகாலம் பொறுப்பில் இருந்தவர் சத்தியநாராயணன். ரசிகர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. ரஜினியுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது. மன்றப் பணிகளைக் கவனிப்பது என் இருந்து வந்தார்.
இந்த நிலையில், அவர் சில குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். அதே நேரத்தில் அவருக்கு உடல்நலக் குறைவும் ஏறப்ட்டது. இத்னைத் தொடர்ந்து உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று சத்தியநாராயணனுக்கு ரஜினி ஓய்வு கொடுத்து அனுப்பி வைத்திருந்நதார்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக, சென்னை கோடம்பாக்கம் ரஜினி மக்கள் மன்ற அலுவலகத்துக்கு சத்தியநாராயண வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ரஜினியை சந்தித்து பேசும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
இந்த சந்திப்புக்குப் பிறகு, மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜு மகாலிங்கத்தை அழைத்த ரஜினி, சத்தியநாராயணாவுக்கு மாநில பொறுப்பு கொடுங்க என்று கூறியதாக தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.