தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு..! தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு சொன்ன முக்கிய தகவல்

By Ajmal KhanFirst Published Jun 8, 2023, 9:17 AM IST
Highlights

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எத்தனை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தேவை என்பதை, கணக்கீடு  செய்யும் பணிகள் நடைபெற்று வருதாக சத்ய பிரத சாகு தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே வியூகங்களை அமைத்து வருகிறது. 3 வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக மாவட்டம் தோறும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் பிரச்சாரத்தை இப்போதே தொடங்க உத்தரவிட்டுள்ளது. இதே போல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாஜகவை வீழ்த்த திட்டம் தீட்டி வருகிறது.  இந்தநிலையில் ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய தேர்தல் திருவிழாவாக வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இன்னும் பல ரயில் விபத்துகளுக்கு வாய்ப்பு - எச்.ராஜா எச்சரிக்கை

வாக்குப்பதிவு இயந்திரம்

ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்ய மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதே போல வாக்காளர் பட்டியலை தயார் படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழகம தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எத்தனை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தேவை என்பதை, கணக்கீடு  செய்யும் பணிகள் நடைபெற்று வருதாக தெரிவித்தார்.

அடுத்த மாதம் முதல் சோதனை

வாக்குபதிவு இயந்திரங்களின் மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்ததும் தேவையானதைவிட 35 சதவீத அதிக இயந்திரங்கள், மாவட்டங்கள் தோறும் உள்ள தேர்தல் துறைக்குச் சொந்தமான கிடங்குகளில் வைக்கப்படும் என கூறினார். அடுத்த மாதம் வாக்கு பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சோதனை நடத்தப்படும் எனவும் தேர்தலுக்கான பணிகள் தொடர்பாக மண்டல வாரியாக ஆய்வு செய்து வருவதாகவும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தீவிரப்படுத்த இருப்பதாகவும் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார். 

இதையும் படியுங்கள்

தைரியம் இருந்தால் நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும்.! ஆளுநர் பதவிக்குள் பதுங்க கூடாது- முரசொலி

click me!