
காமன் வெல்த் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் மீண்டும் தங்கம் வென்ற வேலூரை சேர்ந்த சதீஷ் குமாருக்கு இந்திய ஜாம்பாவான்கள் மற்றும் பொதுமக்கள் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில்,நடைப்பெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்கு 3 ஆவது தங்கம் பளு தூக்கும் போட்டியின் மூலம் கிடைத்துள்ளது
மேலும் வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கமும் பளு தூக்கும் போட்டியின் மூலம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை மொத்தம் 5 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3 ஆவது பட்டியலில் இடம் பெற்று உள்ளது இந்தியா
77 கிலோ எடை பிரிவில் சதீஷ் சிவலிங்கம்
தமிழகத்தை சேர்ந்த சதீஷ் சிவலிகம் 77 கிலோ எடை பிரிவில்,மொத்தம் 317 கிலோ எடை தூக்கி முதல் இடத்தை பிடித்தார்
சேவாக் முதல் சச்சின் வரை சதீஷ் சிவலிங்கத்திற்கு வாழ்த்து
கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சின்,மற்றும் சேவாக் சதீசுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
காயம் இருந்தும், பளு தூக்கி தங்கம் வென்ற சதீசுக்கு மனதார பாராட்டைதெரிவித்து உள்ளார் சச்சின்.
சதீஷ் சிவலிங்கம் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.