சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு .. முதற்கட்ட விசாரணையில் வெளியான முக்கிய தகவல்.. மருத்துவக்கல்வி இயக்குனர் பேட்டி..

Published : May 03, 2022, 07:27 PM IST
சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு .. முதற்கட்ட விசாரணையில் வெளியான முக்கிய தகவல்.. மருத்துவக்கல்வி இயக்குனர் பேட்டி..

சுருக்கம்

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதியே சுகாதாரத் துறை செயலாளர் வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியுள்ளார்.  

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஏற்கப்பட்ட சமஸ்கிருதம் உறுதிமொழி விவகாரம் தொடர்பாக, காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்லூரி முதல்வர் ரத்னவேல், மாணவர் சங்க பிரதிநிதள், பொறுப்பு டீன் ஆகியோரிடம் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு இன்று  விசாரணை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சியில் எப்பொழுதும் பாரம்பரியமாக ஹிப்போகிரடிக் உறுதிமொழிதான் எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஹிப்போகிரடிக் உறுதிமொழிதான் எடுத்து வருகின்றன. ஆனால் இந்த முறை மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் தவறுதலாக மகரிஷி சரக் சப்தா உறுதிமொழி மாற்றி எடுக்கப்பட்டதாகவும் மாணவர் சங்கப் பிரதிநிகள் தவறுதலாக பதிவிறக்கம் செய்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டீன் ரத்னவேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டது என்று தெரிவித்த அவர், தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து வந்தது சுற்றறிக்கையெ தவிர உத்தரவு அல்ல என்று விளக்கினார். எம்சிஐ, என்எம்சிஐ பெயரிலேயே உரிய அங்கீகாரமில்லாமல் வரும் சுற்றறிக்கைகள் குறித்து டீன்கள் சுகாதாரத் துறையிடம் உரிய விளக்கம் பெற்று, தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்திருந்தார்.

மேலும் பிப்.11-ம் தேதி மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், அனைத்து டீன்களுக்கும் அனுப்பட்ட அறிவிப்பில் கூட  காலம் காலமாக மாணவர் சேர்க்கைக்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்றுகிறோமா அதனை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தோம் என்று கூறினார்.கொரோனா காலம் என்பதால் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன்பு சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். எனவே இதுக்குறித்து இன்றைய விசாரணையில் கேட்கப்பட்டது. மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஹிப்போகிரடிக் உறுதிமொழியை மாற்ற வேண்டியது இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

எனவே, தேசிய மருத்துவ ஆணையத்தில் இருந்த வழங்கப்பட்டதாக  கூறப்படும் சுற்றறிக்கை குறித்து உரிய விளக்கம் பெற்று நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அது செய்யாமல் தவறு செய்துவிட்டதாக மாணவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக மருத்துவக்கல்வி இயக்குனர் தெரிவித்தார். மேலும் இந்த விசாரணை குறித்த விவரங்கள் அரசின் கவனத்துக்கு நிச்சயம் கொண்டு செல்லப்படும். இந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை தற்போது நடத்தப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி..? இடியை இறக்கும் மத்திய உளவுத்துறையின் சர்வே ரிப்போர்ட்..!
பெண்களுக்கு குஷியான அறிவிப்பு.. கை நிறைய கொட்டும் பணம்.! மிஸ் பண்ணிடாதீங்க!