
கிருஷ்ணகிரி
திருச்சியில் இருந்து, கர்நாடகா மாநிலத்திற்கு மணல் கடத்தி வந்த, நான்கு லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஓட்டுநர்கள் மற்றும் தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் காவலாளர்கள், கிருஷ்ணகிரி - பெங்களூளு தேசிய நெடுஞ்சாலையில், மேல்சோமார்பேட்டை, டோல்கேட், நமாஸ்பாறை ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே வந்த, நான்கு லாரிகளை காவலாளர்கள் சோதனைக்காக நிறுத்தினர். காவலாளர்களை கண்டதும், லாரி ஓட்டுநர்கள் லாரியை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்த்னர்.
காவலாளர்கள் சோதனை நடத்தியதில் திருச்சியில் இருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன், நான்கு லாரிகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமைறவாக உள்ள லாரி உரிமையாளர்களான மதுரை ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்த நாராயணன், கிருஷ்ணகிரி மாவட்டம், பேகேபள்ளியை சேர்ந்த வெங்கடேஷ், நெடுஞ்சாலையை சேர்ந்த வாசு, மாதேப்பட்டியை சேர்ந்த தேவராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.