கொள்ளை போன நகைகள் 60 அடி கிணற்றில் இருப்பதாக அருள்வாக்கு சொன்ன சாமியாடி; நூற்றுக்கணக்கில் கூடிய மக்கள்...

 
Published : Dec 13, 2017, 06:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
கொள்ளை போன நகைகள் 60 அடி கிணற்றில் இருப்பதாக அருள்வாக்கு சொன்ன சாமியாடி; நூற்றுக்கணக்கில் கூடிய மக்கள்...

சுருக்கம்

Samiyadi said that theft jewelery was in 60 feet in well

சேலம்

சேலத்தில் கோவிலில் கொள்ளை போன நகைகள் 60 அடி ஆழ கிணற்றில் இருப்பதாக சாமியாடி ஒருவர் சொன்னதால் கிணற்றில் தண்ணீரை மின் மோட்டார்கள் கொண்டு அகற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். கிணற்றி அருகே சுற்றியுள்ள கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் கூடியுள்ளனர்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சியில்  உள்ளது சட்டூர் கிராமம். இங்கு துர்காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது.

இந்த கோவிலில் கடந்த 2-ஆம் தேதி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஏராளமான அடியார்கள் வந்து தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. பின்னர் கோவில் நடை மூடப்பட்டது.

மறுநாள் காலையில் ஊர்கௌண்டர் செல்வம் கோவிலுக்கு வந்தபோது கோவில் நடை திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கோவிலின் உள்ளே சென்றுபார்த்தபோது சாமிக்கு போடப்பட்டிருந்த தங்கத் தாலி, சங்கிலி என நான்கரை சவரன் நகையும், வெள்ளி கவசம், வெள்ளி வேல் உள்பட மூன்று கிலோ வெள்ளிப் பொருட்களும் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ந்தார்.

பின்னர், இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க அவர்கள் விசாரணை நடத்தி கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் கரியாம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (60) என்ற அடியார், துர்காளியம்மன் கோவிலுக்கு வந்து சாமியாடி அருள்வாக்கு கூறினார்.

அப்போது அவர், "கோவிலில் கொள்ளை போன நகைகள் ஒரு விவசாய கிணற்றில் கிடக்கிறது" என்றுத் தெரிவித்தார். மேலும், தேங்காயை வைத்தும் குறிபார்த்து கோவில் நகைகள் அந்தக் கிணற்றில்தான் இருக்கிறது உறுதியாக சொன்னார்.

கோவிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த கிணற்றுக்கு மக்கள் திரண்டு சென்றனர். சுமார் 60 அடி ஆழம் கொண்ட அதில் 50 அடி தண்ணீர் கிடந்தது.

எனவே, தண்ணீரை வெளியேற்றினால்தான் நகைகள் கிடக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க  முடியும் என்று அங்கு நான்கு மின் மோட்டார்கள் கொண்டுவரப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.

நேற்று மதியம் 12 மணியளவில் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை பணி நடைபெற்றது. ஆனாலும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை.

இதை காண சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளனர். இன்றும் தண்ணீரை வெளியேற்ற நகையை எடுக்க தீவிரமாக உள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!