Russia Ukraine crisis:உக்ரைன்யிலிருந்து இந்தியா திரும்ப விரும்பும் தமிழக மாணவர்களின் உதவிக்காக டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேட்டா அமைப்பதில் உக்ரை இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, உக்ரைன் மீது போர்தாக்குதலை தொடங்கியுள்ளது.உக்ரைன் தலைநகர் கீவியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.தலைநகர் கீவ் நகரை ரஷிய படைகள் கைப்பற்றும் நிலை உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் விமானப்படை தளங்களை அழித்துவிட்டதாகவும் உக்ரைன் துறைமுகங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சூழலில் 100-க்கும் மேற்பட்ட தங்களின் ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
தலைநகர் கீவுக்குள் ரஷ்ய படைகள் நூழைந்துவிட்டதாக சொல்லபடுகிறது.உக்ரைன் நாட்டிற்கு படைகளை அனுப்பும் எந்த திட்டமும் தற்போது வரை இல்லை என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.ஆனால் போரை கைவிட்டு உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் திரும்ப வேண்டும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
ரஷ்யா போர் தொடுத்துள்ள விஷயத்தில் இந்தியா தலையிட வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலகா கோரிக்கை விடுத்தார். மேலும் மோடி புதினுடன் பேசினால் அவர் நிச்சயம் பதலளிப்பார் என்றும் உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு வலுவான குரல் இருப்பதால் அவர் கூறுவதை புதின் சிந்திப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில்,பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.பாதுகாப்புத்துறை,உள்துறை,வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதனிடையே உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து, உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பும் தமிழக மாணவர்களின் உதவிக்காக டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உதவி தேவைப்படும் மாணவர்கள் +91 92895 16716 என்ற தொலைபேசி எண்ணிலும் ukrainetamils@gmail.com என்கிற மின்னஞ்சலிலும் தொடர்புக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.