
விழுப்புரம்
ஜாக்டோ ஜியோ நடத்தும் வேலை நிறுத்தத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கத்தினர் பங்கேற்பர் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏகாம்பரம் தலைமை வகித்தார்.
இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மத்தியச் செயற்குழு உறுப்பினர் அருணகிரி, மாவட்டச் செயலாளர் ஐயனார், சாலைப் பணியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் குமரவேல், மாநில கௌரவத் தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகள் விளக்கிப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில், “வரும் 22-ஆம் தேதி, ஜாக்டோ ஜியோ போராட்டக்குழு நடத்தும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டச் செயலாளர் ஜெய்குமார், மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட இணைச் செயலாளர் டேவிட் குணசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் இறுதில் மாவட்டப் பொருளாளர் சர்வேஸ்வரன் நன்றித் தெரிவித்தார்.