
புதுக்கோட்டை
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் போதிய அவகாசம் வழங்காமல் நெருக்கடி கொடுப்பதைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி முடிக்க போதிய கால அவகாசம் வழங்காமல் நெருக்கடி கொடுப்பதை தவிர்ப்பது,
இந்தத் திட்டத்தில் தகுதியான நபர்களை தேர்வு செய்து கிராம சபையில் ஒப்புதல் பெற்று வீடு கட்டி கொடுக்கும் வகையில் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் நெருக்கடி திணிக்கப்படுவதை கைவிட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பால்பிரான்சிஸ், மாநிலச் செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.