பைனான்ஸ் கம்பெனி நடத்தி ரூ.2 கோடி “அபேஸ்…” – 3 பேர் கைது

First Published Jan 3, 2017, 12:29 PM IST
Highlights


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலி நிதி நிறுவனங்கள், பொது மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்ட இருக்கிறது. இதையொட்டி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற போலி நிதி நிறுவனங்களை நம்பி மக்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டாலும் இது போன்ற மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் மதுரையியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட ஒரு தனியார் நிதி நிறுவனம், அதன் கிளை நிறுவனங்களை குமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படுத்தியது. இந்த நிறுவனத்தில் பொது மக்கள் பணத்தை முதலீடு செய்தால், பணம் முதிர்வடைந்த பிறகு வீட்டு மனைகள், விவசாய நிலங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் பொது மக்கள் செலுத்தும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாகவும், தேவைப்படும்போது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் நிதி நிறுவனம் கூறியுள்ளது. இதனை நம்பிய பொதுமக்கள் ஏராளமானோர், அந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வுகாலம் வந்த பிறகு அவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படவில்லை.
இந்த நிதி நிறுவனத்தில் அருப்புக்கோட்டையை சேர்ந்த மீனா (58) என்பவரும் பணத்தை முதலீடு செய்துள்ளா. அவர் டெபாசிட் செய்த பணம், முதிர்வு காலத்திற்கு பின்னரும் வழங்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மீனா இதுபற்றி மதுரை புறநகர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மீனாவை போல் ஏராளமானோர், தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இதையடுத்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நிதி நிறுவன இயக்குனர்கள் நல்ல பெருமாள், ரகுராமன், கில்பர்ட்ஜேம்ஸ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமைறைவாக உள்ள இவர்களது கூட்டாளிகள் 3 பேரை தேடி வருகின்றனர்.

click me!