அறிகுறிகள் தென்பட்டால் RTPCR சோதனை கட்டாயம்... மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்!!

Published : Apr 24, 2022, 02:44 PM IST
அறிகுறிகள் தென்பட்டால் RTPCR சோதனை கட்டாயம்... மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்!!

சுருக்கம்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனிடையே உருமாறிய XE வகை கொரோனாவால் நான்காம் அலை பரவி வருவதாக உலக நாடுகள் தெரிவித்திருந்தன. இந்த வகை தொற்று தற்போது சீனாவில் தீவிரமாக பரவி வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இந்த வகை கொரோனா தொற்று அதி வேகமாகப் பரவக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே கொரோனா மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சென்று வருவோருக்கு அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுக்குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண் எழுதியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அறிகுறி தென்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று உறுதியானால் மருத்துவத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று இல்லை என முடிவு வந்தால் தொடர்ந்து உடல்நிலையை சுய கண்கானிப்பு செய்து கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்ரவலர்கள், குடியிருப்பு நலசங்கத்தினர் உதவியுடன் தடுப்பூசியை அதிகளவில் செலுத்த முயற்சி எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுகவை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்..! மதுரையில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தல்: காரைக்குடியில் போட்டியிடுகிறார் சீமான்..! 234 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம்