மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.17.60 கோடி நிவாரண உதவி: தமிழக அரசு தகவல்

By SG BalanFirst Published Dec 11, 2023, 6:32 PM IST
Highlights

தமிழ்நாட்டின் 34 மாவட்டங்களில் இருந்தும் 17.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.17.60 கோடி நிவாரணப் பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான குடிநீர் பாட்டில்கள், 3 லட்சத்துக்கும் அதிகமான பிரெட் பாக்கெட்டுகள், 13 லட்சத்துக்கும் மேலான பிஸ்கட் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

Latest Videos

மேலும், 73 டன் பால் பவுடர், 4.35 லட்சம் கிலோ அரிசி மற்றும் 23 ஆயிரம் கிலோவுக்கு மேல் உளுந்து முதலிய சமையலுக்குத் தேவையான பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

புதிய ஜம்மு காஷ்மீர்! நனவாகத் தொடங்கிய பிரதமர் மோடியின் நெடுங்காலக் கனவு!

தமிழ்நாட்டின் 34 மாவட்டங்களில் இருந்தும் 17.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் விநியோகித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட வாட்ஸ்அப் எண் மூலம் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றையும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கி வருவதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த நிவாரணப் பொருட்கள் யார் யாருக்குக் கிடைக்கும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பும் இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்பான நகரம் எது? தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வழங்கும் டாப் 10 பட்டியல்!

click me!