பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆண்டு முதல்முறையாக தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது.
பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆண்டு முதல்முறையாக தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது.
பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆண்டு முதல்முறையாக தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு என்ற சிறப்பு திறனாய்வுத்தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தேர்வு மூலம் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இதையும் படிங்க;- ரூ.1 லட்சம் மாத சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு.. விண்ணப்ப பதிவு தொடங்கியது..
இந்த ஆண்டு தேர்வுக்காக பிளஸ் 1 மாணவர்களிடம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்தபடி தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடைபெறுகிறது. இத்தேர்வில் 2 லட்சத்து 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்துகொள்கிறார்கள்.
இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தேர்வர்களைத் தேர்வு மையத்தினை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கான பெயர்ப்பட்டியல், தேவையான வினாத்தாள் மற்றும் பெயர்ப்பட்டியல், தேவையான வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாள்கள் பெறப்பட வேண்டும். இந்த தேர்வில் அரசு, தனியார் பள்ளிகள் மட்டுமல்லாது சிபிஎஸ்ஐ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- Chennai Power Shutdown: சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்.. இன்று இந்த பகுதிகளில் 5 நேரம் கரண்ட் இருக்காது..!