
குடிநீர் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கிய 105 கோடி ரூபாய் நிதிக்கான அரசானை இன்று வெளியிடப்பட்டது.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் வறட்சி நிவாரணம், குடிநீர் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், குடிநீர் தரத்தினை உறுதி செய்த பிறகே மக்களுக்கு வழங்க வேண்டும் என முதல் அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். வறட்சி நிவாரணம், குடிநீர் திட்ட பணிகளை கள ஆய்வு செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஆய்வுகள் முடிவுற்ற நிலையில், தற்போது குடிநீர் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கிய 105 கோடி ரூபாய் நிதிக்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்திற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வடிகால் வாரியம் மற்றும் குடிநீர் வாரியத்திற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் நகராட்சிக்கு 30 கோடி ரூபாய் , பஞ்சாயத்திற்கு 15 கோடி ரூபாய், கிராம புறத்திற்கு 15 கோடி ரூபாய் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.