தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனசரகத்திற்கு உட்பட்ட எருமைசாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் கடாமான் (மிளா) கறி வைத்திருந்த நான்குபேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இப் பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விடுவது வாடிக்கையாகி வருகிறது. இதேபோல் காட்டுக்குள் சென்று விலங்குகளை வேட்டையாடும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
பணியில் மெத்தனம்? தூக்கி அடிச்சிருவோம் பாத்துக்கோங்க - அமைச்ர் துரைமுருகன் ஆவேசம்
இந்நிலையில் கடையநல்லூர் வன சரக்கத்திற்கு உட்பட்ட எருமை சாடி மற்றும் மேக்கரை பகுதிகளில் வனச்சரக அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருமலாபுரம் பகுதியை சார்ந்த காசிராஜன், மேக்கரை பகுதியை சார்ந்த ஆறுமுகம், இசக்கிமுத்து, ஐயப்பன் என்பது தெரியவந்தது.
திருச்சியில் நள்ளிரவில் மண்டை ஓடுகளுடன் நவராத்திரி கொண்டாடிய அகோரிகள்
மேலும் அவர்களை சோதனை செய்ததில் எருமை சாடி பகுதியில் செந்நாய் கடித்து இறந்த கடாமான் (மிளா ) - வின் இறைச்சி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் அத்துமீறி நுழைந்து விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.