ரூ.1 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை தீவில் தூக்கி வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்…

 
Published : May 05, 2017, 09:06 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
ரூ.1 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை தீவில் தூக்கி வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்…

சுருக்கம்

Rs 1 crore gold tumors were thrown on the island and kidnapped by kidnappers

இராமநாதபுரம்

ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கடல் வழியாக கடத்தியவந்தபோது, சுங்கத்துறையினர் சூழ்ந்ததால் அதனை தீவில் தூக்கி வீசிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடினர்.

இலங்கையில் இருந்து இராமேசுவரத்துக்கு கடல் வழியாக தங்கக் கட்டிகள் கடத்துகிறார்கள் என்று சுங்கத்துறையினருக்கு இரகசியத் தகவல் ஒன்றுக் கிடைத்தது.

அதன்படி, சுங்கத்துறை அதிகாரிகள் நேற்றுக் காலை பாம்பன் கடல் பகுதியில் சுற்றுப் பணியில் ஈடுபட்டு, கண்காணிப்பு நடத்தினர். அப்போது, சுங்கத்துறையினரைக் கண்டதும் மீன்பிடி நாட்டுப் படகில் இருவர் வந்தனர். உடனே, சுங்கத்துறையினர் அந்தப் படகை மடக்கிப் பிடித்தனர்.

பிறகு, துப்பாக்கியால் கடத்தல் படகை நோக்கிச் சுட்டுபிடித்தனர். இதனால், கடத்தல்காரர்கள் ஒரு பிளாஸ்டிக் கேனை முயல் தீவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

அந்த பிளாஸ்டிக் கேனை சுங்கத்துறையினர் மீட்டனர்.

பின்னர், அதில் நடத்திய சோதனையில் அதனுள் 40 தங்கக் கட்டிகள் இருந்தது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:

“நான்கு கிலோ எடை கொண்ட இந்த தங்கக்கட்டிகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 20 இலட்சம் இருக்கும். தப்பியோடியவர்களை தீவிரமாகத் தேடி வருகிறோம்” என்றனர்.

PREV
click me!

Recommended Stories

சுழன்று அடிக்கப்போகும் சூறாவளிக்காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.! மழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?