மாமியாருக்கு வீட்டுக்கு சென்ற பிரபல யூடியூபர் விபத்தில் உயிரிழப்பு! கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Jan 17, 2025, 7:37 PM IST

ஈரோட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி, இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தார். அதிவேகமாகச் சென்ற அவரது வாகனம் சென்டர் மீடியனில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி (27). இவர் நேற்று இரவு மனைவி தேவிகாஸ்ரீ என்பவரை பார்ப்பதற்காக கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அதிகவேகமாக சென்றுள்ளார். 

அப்போது கட்டுப்பாடை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் நடுவில் உள்ள செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் போராடிய ராகுல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரணு வாக்குறுதி அளித்துவிட்டு இப்படி பண்ணலாமா? அமைச்சர் அறிவிப்புக்கு எதிர்ப்பு!

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இன்ஸ்டா பிரபலம் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றதால் உயிரிழந்தது தெரியவந்தள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலமான ராகுலை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். 

இதையும் படிங்க:  பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு! 1267 காலிப்பணியிடங்கள்! சம்பளத்தை கேட்டா ஷாக் ஆயீடுவிங்க!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணமான நிலையில் கணவர் உயிரிழந்த செய்தியை கேட்டு மனைவி நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!