தாழ்த்தப்பட்டவர் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என கூறுவதை தமிழகத்தில் தான் கேள்விப்படுகிறேன் - ஆர்.என்.ரவி

By Ajmal Khan  |  First Published Sep 18, 2023, 1:05 PM IST

இன்றைக்கு ஹிந்து தர்மத்தை அழிப்பதற்காக பேசி வருகிறார்கள். என்ன செய்தாலும் ஹிந்து தர்மத்தை அழிக்க முடியாது என தெரிவித்த ஆர்.என் ரவி அதில் அவர்கள் வெற்றி பெற போவது இல்லை. ஹிந்து தர்மம் நமது இதயத்தில் இருக்கிறது என கூறியுள்ளார். 


கோயில் நமது கலாச்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒழுகச்சேரியில் தமிழ் சேவா சங்கம் சார்பில், சிவ குலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.  இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கோவில் என்பது நமது கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக, ஒரு ஊரை உருவாக்கும் போது நாம் முதலில் உருவாக்குவது கோவிலை தான். அதன் பிறகு தான் வீடுகள் மற்றவை எல்லாம் உருவாக்கிறோம். கோவில் என்பது வெறும் வழிபாட்டு தலம் அல்ல. அது நமது கலாச்சாரத்துடனும், வாழ்க்கை முறையோடு பின்னி பிணைந்துள்ளதாக தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

ஹிந்து தர்மத்தை அழிக்க முடியாது

பாரத்தின் வலிமையாக ஹிந்து தர்மமாத்தால் அமைந்துள்ளது. இதில் யாரும் புறக்கணிக்கப்பட்டவர்கள் இல்லை. இந்தியாவின் மீது பலரும் படையடுத்து, பாரத தர்மத்தை பலவீனப்படுத்த, ஒழிக்க வேண்டும் என நினைத்தனர். ஆனால், நமது டி.என்.ஏ.,விலும், உடலில் இருந்ததால், அழிக்க முடியவில்லை. ஹிந்து தர்மத்தை, ஆங்கிலேயார்கள் உள்ளிட்ட பலராலும் அழிக்க முடியாமல் போனாலும், பல பாதிப்புகளை உருவாக்கி விட்டனர். காந்தி அவர்கள் கூறியது போல, நமது காலச்சாரம், பண்பாடு எப்போது மறுமலர்ச்சி பெறுகிறேதோ அப்போது தான் உண்மையான சுதந்திரமாகும். 

ஹிந்து தர்மத்தை அழிக்க முடியாது

உலகத்தின் வளர்ச்சி இயந்திரமாக இந்தியா உள்ளது. ஜாதி,மத வேறுபாடு இருந்தாலும், நமது பாரத குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனை என்றாலும், அது நமது நாட்டிற்கான பிரச்சனையாக பார்க்க வேண்டும். இன்றைக்கு ஹிந்து தர்மத்தை அழிப்பதற்காக பேசி வருகிறார்கள். என்ன செய்தாலும் ஹிந்து தர்மத்தை அழிக்க முடியாது. அதில் அவர்கள் வெற்றி பெற போவது இல்லை. ஹிந்து தர்மம் நமது இதயத்தில் இருக்கிறது. ஹிந்து தர்மம் அரசியல் அமைப்பு சட்டத்தில் பின்னிபிணைக்கப்பட்டுள்ளது. சிலர் அரசியல் அமைப்பு சட்டத்தை புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள் அல்லது படிக்காமல் இருந்தவர்கள் தான் இன்றைக்கு தவறாக பேசி வருகிறார்கள்.  

தமிழகத்தில் தீண்டாமை அதிகம்

ஹிந்து தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவார்களுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. அது இந்தியாவை பிளவுப்படுத்த வேண்டும் என்பது தான்.  தீண்டாமையும், வேறுபாடும் குறித்து ஹிந்து தர்மம் கூறவில்லை. இந்தியாவில் தீண்டாமை அதிகளவில் தமிழகத்தில் தான் நடக்கிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள்ளாக நுழைய கூடாது என கூறுவதை தமிழகத்தில் தான் பார்க்கிறேன். ஜாதி அடையாளங்கள் அணிந்து கொள்ளுவர்கள் தமிழகத்தில் அதிகம் உள்ளனர். அவர்களுக்காக ஜாதி கட்சியினர் நிறையாக இருக்கின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என்பதையும் தமிழகத்தில் தான் கேட்கிறேன் என ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். 

click me!