10,12ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி அடுத்தவாரம் திருப்புதல் தேர்வு... அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை!!

Published : Jan 11, 2022, 08:39 PM IST
10,12ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி அடுத்தவாரம் திருப்புதல் தேர்வு... அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை!!

சுருக்கம்

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி, ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி, ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் மாணவர்களின் கல்வி இடைவெளியை சரிசெய்யும் விதமாக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி என்னும் திட்டம் தொடங்கப்பட்டது.

பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களின் கண்காணிப்பில் அரசின் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையே கடைப்பிக்கும் வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்துமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி வரும் 19ம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நேற்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 10,11 மற்றும் 12ம் வக்கு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்பிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி, ஜனவரி 19ம் தேதி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

2.30 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்ட பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி..!
Tamil News Live today 16 January 2026: 2.30 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்ட பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி..!