புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக சாராயக் கடைக்கு எதிர்ப்பு; 50-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்...

 
Published : Jan 19, 2018, 08:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக சாராயக் கடைக்கு எதிர்ப்பு; 50-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்...

சுருக்கம்

Resistance to the Alcohol Shop as a newly opened Toss More than 50 women fight ...

திருவள்ளூர்

திருவள்ளூரில் புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே, புதிதாக டாஸ்மாக் சாராயக் கடையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பொன்னேரி - தச்சூர் கூட்டு சாலை அருகே உள்ள பெருஞ்சேரி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடையைத் திறக்க, ஆறு மாதத்திற்கு முன்பு மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.  அப்போதே அப்பகுதி மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்படவில்லை.  இந்த நிலையில் பெருஞ்சேரியில் புதிய கட்டடம் கட்டி, அதில் டாஸ்மாக் சாராயக் கடையைத் திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த தகவலை அறிந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் புதிதாக கட்டப்பட்ட டாஸ்மாக் கட்டடத்தை முற்றுகையிட்டு டாஸ்மாக் சாராயக் கடையைத் திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்த பொன்னேரி காவலாளர்கள் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!