ஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்; பதுக்கி வைத்தவர்கள் யார்? விசாரணை நடக்கிறது...

First Published Jan 19, 2018, 8:41 AM IST
Highlights
1 ton ration ration to be smuggled into Andhra Who Investigation is going on ...


திருவள்ளூர்

திருவள்ளூரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படவிருந்த 1 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பதுக்கி வைத்தவர்கள் யார்? என்று அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, முஸ்லிம் நகரில் உள்ள காலி மனைப் பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபாலுக்கு புகார் வந்தது.

இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் உத்தரவின், தாசில்தார் ராஜகோபால் தலைமையில் வட்ட வழங்கல் அதிகாரி மதியழகன், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

அப்போது,  ஒரு டன் ரேசன் அரிசி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், ஒரு டன் ரேசன் அரிசியும் ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டைக்கு கடத்தப்படவிருந்ததும் தெரியவந்தது.

மொத்தம் 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேசன் அரிசியும் பறிமுதல் செய்தனர்.

ரேசன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தவர்கள் யார்? அவை கும்மிடிப்பூண்டியில் உள்ள எந்தெந்த ரேசன் கடைகளில் இருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து வட்டாட்சியர் விசாரித்து நடத்தி வருகிறார்.

click me!