பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மறுப்பு – ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் முற்றுகை

Asianet News Tamil  
Published : Jan 03, 2017, 09:40 AM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மறுப்பு – ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் முற்றுகை

சுருக்கம்

கடந்த நம்வம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அப்போது, தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும், மார்ச் 31ம் தேதி வரை ரிசர்வ் வங்கியிலும் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகு கூட்டம் குறைந்ததும் ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என இருந்த பலர், பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுடன் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு நேற்று காலை திரண்டனர்.

ஆனால், ரிசர்வ் வங்கி ஊழியர்கள், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில்லை என கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த்த மக்கள், என்ன செய்வது என தெரியாமல் திகைத்தனர். பிரதமர் மோடியின் அறிவிப்பை சுட்டிக்காட்டி அவர்கள் வாக்குவாதம் செய்தனர். ஆனாலும், அவர்கள் மறுத்துவிட்டனர்.

கடும் ஆத்திரம் அடைந்த மக்கள், ரிசர்வ் வங்கியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்ப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரசம் பேசி, அங்கிருந்து கலைய செய்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், என்னிடம் பழைய நோட்டுகளை மாற்ற வந்தோம். அதற்கு ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. மார்ச் 31ம் தேதி வரை வாய்ப்பு கொடுத்தும், ரிசர்வ் வங்கி அலட்சியமாக பதில் கூறுகிறது என்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஆண்களுக்கு இலவச பேருந்து.. மகளிருக்கு ரூ.2000.. திமுக போட்டியாக இபிஎஸ் தேர்தல் வாக்குறுதிகள்
பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை.. ஒரே வரியில் சொன்ன அன்புமணி!