பொட்டிக்கடை அண்ணாச்சியாக மாறிய ரிசர்வ் வங்கி... 20 ஆயிரத்தை சில்லறையாக வழங்கிய கொடுமை

First Published Nov 26, 2016, 2:58 PM IST
Highlights


20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக சென்ற பெண்ணிடம், பெட்டிக்கடை அண்ணாச்சி போல 10 ரூபாய் நாணயங்களை பொட்டலம் பொட்டலமாகக் கட்டி கொடுத்து அனுப்பியுள்ளது ரிசர்வ் வங்கி.

கடந்த 8-ஆம் தேதி, செல்லாத நோட்டுகள் அறிவிப்பைத் தொடர்ந்து தினமும் புதிது புதிதாக மக்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், அப்போதும் இந்த அரசு அதிகாரிகாளும், மத்திய அரசும் எதாவது கோக்கு மாக்காக செய்து மக்களை சிரிக்க வைத்தும் கொண்டிருக்கிறது.

முதலில், 2000 ரூபாய் நோட்டுகளை, நாடெங்கும் இருக்கும் ஏ.டி.எம் இயந்திரங்களில் பொருந்துவது போல அச்சிடாமல் நோட்டை அச்சிட்ட பின்பு, ஏ.டி.எம் இயந்திரங்களின் பணம் வைக்கும் பெட்டியின் அளவில் மாற்றம் ஏற்படுத்தியது. இதனை அனைத்து நெட்டிசன்கள் முதல்கொண்டு பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பள்ளிக்கூட சிறுவர், சிறுமியர் வரை முகநூலில் இந்த பொது அறிவுகூட மத்திய அரசுக்கு இல்லையா என்று கலாய்த்து தள்ளினர்.

பிறகு, புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய்களை ஏற்கனவே அச்சிட்டு வைத்திருந்தும், 500 ரூபாயை வெளியிட தாமதப்படுத்தி மக்களை 2000 ரூபாய்க்கு சில்லறை தேடி அலையவிட்டும், 100 ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தியும் மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டது.

அதன் விளைவாக தான் வடமாநிலத்தில் பாஜக அமைச்சர் தரும அடி வாங்கியது.

வங்கிகளில் பணம் மாற்றுவது போல பிக் பசாரிலும் பணம் மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பின் மூலம் குறிப்பிட்ட முதலாளிக்கு தான் என்றும் விசுவாசத்தோடு இருப்பேன் என்பதை காட்டி மீண்டும் ஒருமுறை மக்களிடம் மாட்டிக் கொண்டார் பிரதமர். அப்படியென்றால், 100 ரூபாய் நோட்டுகள் பிக் பசாரிடம் ஒப்படைக்கப்பட்டதா என்றெல்லாம் யோசிக்கக் கூடாது. நம் பிரதமர் எது செய்தாலும் அது மக்களின் நலனுக்கே என்று நம்புவோர்தான் தேச பக்தர்க்ள் என்பர் பாஜகவினர்.

இவ்வளவும் முடித்தபின்பு, இன்று ரிசர்வ் வங்கி, புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்த பின்பும், 20 ஆயிரம் ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்களை பொட்டலம் கட்டிக் கொடுத்துள்ளது.

பொட்டலத்தை வாங்கிய அந்த பெண்மண், “500 ரூபாயா தருவாங்கனு பார்த்த இப்படி பொட்டலம் கட்டி கொடுத்துட்டாங்க. நான் என்ன சில்லறையா கேட்டேன்” என்று கேள்விக் கேட்டு ரிசர்வ் வங்கியைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பைத் தட்டிவிட்டார்...

click me!