
நாளை குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று காலை அணி வகுப்பு ஒத்திகை சென்னை மெரினா கடற்கரையில்நடந்தது. இதனை தமிழக முதன்மை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதை தொடர்ந்து, குடியரசு தின விழாவின் போது, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில ஈடுபட்டுள்ளனர். முக்கிய பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், கோயில், மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் ஆகிய பகுதிகளில்,போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர் இதனால், சென்னை நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்த்து.
இதையொட்டி சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதும், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பிரச்சனைக்குரிய பகுதிகளை கண்டிறிந்து, அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் 2000க்கு மேற்பட்ட போலீசார், துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.