ஊட்டியில் இன்று குடியரசு நாள் விழா கொண்டாட்டம்; தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆட்சியர்...

First Published Jan 26, 2018, 11:06 AM IST
Highlights
Republic Day Celebration Today collector show respect for national flag


நீலகிரி

ஊட்டியில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு குடியரசு தின விழா தொடங்கியது.

இந்த விழாவில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவர் காவல்துறை, தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்த விழாவையொட்டி, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்தல், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சி, பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.

இந்த விழாவில், 10 காவலாளர்களுக்கு முதலமைச்சர் பதக்கம், 27 காவலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்குகிறார்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கர பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழாவுக்கு வந்த அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதனையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்கானிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் ஆயிரம் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

click me!