பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்த மத்திய தொழிற்சங்கத்தினர் 47 பேர் கைது...

 
Published : Jan 26, 2018, 10:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்த மத்திய தொழிற்சங்கத்தினர் 47 பேர் கைது...

சுருக்கம்

47 central trade union people arrested for protest

நாமக்கல்

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் 47 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

"விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

தொழிலாளர் நலச்சட்டங்களை முதலாளிகளுக்கு சாதகமாக திருத்தக் கூடாது.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

குறைந்தபட்சஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் மாவட்டம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் பழனியப்பன், தனசேகரன், சிங்காரம், பழனிவேலு, பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவர் தம்பிராஜா, சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச்செயலாளர் சிவராஜ் உள்பட பலர் பங்கேற்று சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்

PREV
click me!

Recommended Stories

காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு
அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!